ஒரு நாள் மாலை பொழுது , ஒருவன் தன் இயந்திர வாழ்க்கையை முடித்து, மனதிற்கு அமைதி தேட கடற்கரையை நாடி வருகிறான் .
அங்கே இருந்த அனைவரது முகத்திலும் சோர்வு .... பாவம் தன்னை போல் அனைவரும் அலுத்துபோய் இருந்தனர் .
சரி , மன அமைதி தேடி வந்தால் , ஏன் அனைவரும் சோகம் சூழ அமர்ந்திருந்தார்கள் ....?
ஒரு முதியவரிடம் சென்று கேட்ட போது , தன் குடும்பத்தில் இன்று நடந்த பிரச்சனை , நாளை வரபோகும் பிரச்சனை எண்ணியே தமது சோகம் என்றார் .
இதை போன்ற காரணம் தான் (நடந்த , நடக்க போகிற பிரச்சனைகள் ), மற்ற சிலர் கூறியது ...
ஆனால் , அங்கு விளையாடி கொண்டு இருந்தவர்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் இருந்தனர் .
சில சமயங்களில் , மன அமைதி என்பது உடல் சார்ந்து இருக்கும் என்பதில் மட்டும் அவனுக்கு நம்பிக்கை அதிகமானது.
"விளையாடும் போது மட்டும் மனம் மற்றவற்றை சிந்திக்காது"
என்பதை உணர்ந்த அவன் சற்று தூரம் மெல்ல ஓடினான் .....
No comments:
Post a Comment